ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
இன்று குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.
ஆனால், ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறி எதிர்க்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ நான் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனால் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனது மனதை கேட்டு நான் வாக்களித்தது எனது தனிப்பட்ட முடிவு, அதனால்தான் அவருக்கு வாக்களித்தேன்.’ என கூறியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…