PM Modi [Image source : ANI]
பிரதமர் மோடி கூறிய தற்கொலை ஜோக் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக மக்கள் மத்தியில் பேசுகையில், ஓர் நகைச்சுவை பதிவு ஒன்றை கூறினார். அவர் கூறுகையில், தாங்கள் சிறு வயதில் ஒரு ஜோக் கேட்போம். அதாவது, ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் இருப்பார். பேராசிரியர் மகள் , தனக்கு மிக மன சோர்வாக இருக்கிறது. அதனால் கங்காரியா ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்.
அந்த சமயம் மகள் எழுதிய கடிதத்தை பார்த்த பேராசிரியர் கடும் கோபமடைவார். அப்போது அந்த பேராசிரியர், நான் எத்தனை முறை சொல்லி கொடுத்து இருப்பேன். மீண்டும் கங்காரியா ஆற்றின் பெயரை தவறாக எழுதிவிட்டாள் என கூறினார் என பிரதமர் மோடி கூறியதும் பலரும் சிரித்து விட்டனர்.
இந்த ‘தற்கொலை’ ஜோக் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், தற்கொலையால் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள், குழந்தைகளை இழக்கின்றனர் என்றும், அவர்களை பிரதமர் மோடி கேலி செய்ய வேண்டாம் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அதிக தற்கொலை எண்ணிக்கை ஒரு சோகம் என்றும் அது நகைச்சுவை அல்ல என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…