#Breaking:காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்…!
- காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ்(வயது 80),சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில்,திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார்.
இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில்,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு,இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: “உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான இணைப்பான டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி மறைந்த சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்.பொது சேவை மற்றும் காங்கிரஸ் கட்சிக்காக அவர் கடைசி வரை பணியாற்றினார்.அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள் ஒரு உத்வேகம்.அவரின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று தெரிவித்தார்.
उत्तराखंड में कांग्रेस पार्टी की एक मज़बूत कड़ी, डॉ इंदिरा हृदयेश जी के निधन का दुखद समाचार मिला। वे अंत तक जन सेवा एवं कांग्रेस परिवार के लिए कार्यरत रहीं। उनके सामाजिक व राजनीतिक योगदान प्रेरणास्रोत हैं।
उनके प्रियजनों को शोक संवेदनाएँ। pic.twitter.com/b8KmeSCoqw
— Rahul Gandhi (@RahulGandhi) June 13, 2021
அவரை தொடர்ந்து,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்தார். அவர் ஒரு திறமையான சட்டமன்ற உறுப்பினராகவும், சிறந்த நிர்வாக அனுபவம் உடையவராகவும் இருந்தார்.எனவே,அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி”,என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்துள்ளது.
Dr. Indira Hridayesh Ji was at the forefront of several community service efforts. She made a mark as an effective legislator and also had rich administrative experience. Saddened by her demise. Condolences to her family and supporters. Om Shanti: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 13, 2021