காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 60,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 835 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் 7,365,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 112,146 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர். 6,448,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 804,705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,‘எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்தவர்கள் , தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
I have tested positive for COVID-19. I am in home quarantine. Those who came in contact with me in last few days may kindly follow the protocol.
— Ghulam Nabi Azad (@ghulamnazad) October 16, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025