பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.
இதன்தொடர்ந்து 4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை செய்து வந்த நிலையில் இன்று அவரை கைது செய்தது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…