60 வயதிலும் மணம் முடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்… தோழியை மனைவியாக்கினார்… ராஜஸ்தான் முதல்வர் நேரில் வாழ்த்து…

Default Image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காங்கிரஸ்  தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவி வகித்தவர். தற்போது இவர் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முகுல் வாஸ்னிக் தனது அறுபதாவது வயதில் தனது நீண்ட நாள் தோழியான  ரவீனா குரானாவை மணந்துள்ளார்.  ரவீனா ஒரு தொழிலதிபர் என்பதும், இவருக்கும் அறுபது வயது என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிய்யில்  நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்