பாஜகவை வலுவாக எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள் தான்.! காங்கிரஸ் பொதுசெயலாளர் பேட்டி.!
எந்தவித இரட்டை நிலைப்பாடும் இன்றி காங்கிரஸ் பாஜகவை எதிர்கொண்டு வருகிறது . – காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் ஒன்று கூட வேண்டும் என குறிப்பிட்டார். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒண்றிணைய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
ஒற்றுமை யாத்திரை : காங்கிரஸ் அதன் பழைய பெருமைகளை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்கவில்லை. இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டது. அதன் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்துக்கொண்டுபாஜகவை எதிர்க்க ஒரு கூட்டத்தை உருவாக்கவேண்டும் என குறிப்பிட்டார்.
இரட்டை நிலைப்பாடு : மேலும், 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் எனவும், பாஜகவை எந்த வித சமரசமும் இன்றி வலுவாக எதிர்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே என குறிப்பிட்டார். எந்தவித இரட்டை நிலைப்பாடும் இன்றி காங்கிரஸ் பாஜகவை எதிர்கொண்டு வருகிறது எனவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.