காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் போட்டியிடுவேன், என்று அக்கட்சியின் மூத்த தலைவர், தெரிவித்துள்ளார்.மீண்டும் ராகுலே தலைவராக வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்த நிலையில் மூத்த நிர்வாகியின் இந்த அறிவிப்பு அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார்? இவர் என்றால் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர்.மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்வர் சமீபத்தில், ஆங்கில நாளிதழ் ஒன்றில், கட்டுரை எழுதி இருந்தார்.அதில், ‘காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில் அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுவதாக விமர்சனம் செய்த சஞ்சய் ஜா ஆவர்.
காங்கிரஸின் தற்போதைய நிலை குறித்து அவர் எழுதிய இதழில் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை சீர் செய்வதில் அசாதாரண மந்தநிலை மற்றும் குழப்பம் நிலவுவதாகவும்,இதை உணர முடியாத தலைவர்கள் பலர், கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். காந்திய சிந்தனை மற்றும் நேருவின் கண்ணோட்டத்தை உயிர் மூச்சாக கொண்டுள்ள என்னை போன்றவர்களுக்கு, கட்சி சிதைந்து வருவது கடும் அதிர்ச்சியளிக்கிறது, என்று கூறியிருந்த அவரது இந்த கட்டுரை, பெரும் சர்ச்சையை கட்சியினரிடையே ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து சஞ்சய் ஜாவை அதிரடியாக அக்கட்சி தலைவர், சோனியா நீக்கி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவராக, ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியினரில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் கட்சி தலைவர் பொறுப்பை, ராகுல் விரைவில் ஏற்பார் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.
இவ்வாறு இருக்க சஞ்சய் ஜா தலைவர் பதவி குறித்து கூறியதாவது:காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தேர்தல் எப்போது நடந்தாலும், அதில் நான் போட்டியிடுவேன். இதில், எந்த சந்தேகமும் வேண்டாம். நேருவின் கொள்கைகளை உறுதியாக கடைப்பிடிக்கும் நான், கட்சியை வலுவடைய செய்வதில் முக்கிய பங்கு வகிப்பேன். பா.ஜ.,வுக்கு எதிராக, கட்சியை பலமாக்குவேன்.என்று கூறினார்.இவருடைய இந்த கருத்தால் காங்.,கட்சிக்குள் புகைய தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…