காங்கிரஸ்க்கு டாடா குட்பை; இனி இணைந்து பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்
இனி காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று பீகார் மாநிலம் வைஷாலியில் உள்ள மறைந்த ஆர்ஜேடி தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் இல்லத்தில் இருந்து ஜன் சூரஜ் யாத்திரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவர்களுடன் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
ஆனால் 2017 உ.பி. காங்கிரஸ் கட்சி.”எனது சாதனையை காங்கிரஸ் கெடுத்து விட்டது, அதனால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் முன்னேற்றம் அடையப் போவதில்லை என்றும்,கடந்த 10 ஆண்டுகளில் 11 தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அதில் 2017ல் உ.பி.யில் காங்கிரஸ் உடன் பணியாற்றியதில் ஒன்று மட்டும் தோல்வியடைந்ததாக கூறினார்.
2015ல் பீகாரில் மகாகத்பந்தன், 2017 பஞ்சாப், 2019ல் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, 2020ல் டெல்லி கெஜ்ரிவால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் 2021ல் வெற்றி பெற்றனர், ஆனால் 2017ல் உ.பி.யில் (காங்கிரஸ்) தோல்வி அடைந்தது.
“எனவே காங்கிரஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்… அது முன்னேற்றமடையாத கட்சி… கட்சியை நான் மதிக்கிறேன் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கட்சியால் முன்னேற முடியவில்லை. நம்மையும் மூழ்கடித்துவிடும்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.