ஊழல், கலவரம் உள்ளிட்டவையில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியது காங்கிரஸ் .. கடைசி நாள் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!

pm modi

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு மற்றும் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் நடைபெறும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு உள்ளது. இதனால் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று கடைசி நாளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ், கலவரம், குற்றம், ஊழல், தகவல் கசிவு போன்றவற்றில் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சுற்றுலா, முதலீடுகள், தொழில்கள் மற்றும் கல்வியில் மாநிலத்தை “நம்பர் ஒன்” ஆக மாற்றுவோம்.

கலவரங்கள், குற்றம், ஊழல் மற்றும் காகித கசிவுகளில் (காங்கிரேசின் ஐந்தாண்டு ஆட்சியில்) ராஜஸ்தானை முதலிடத்திற்கு உயர்த்தியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து திட்டங்களையும் காங்கிரஸ் அரசு நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். அதாவது, ஐந்தாண்டுகளுக்கு முன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், எங்களது அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனர்.

15 சீட்களை பாஜக தாண்டுமா என பார்ப்போம்.! சத்தீஸ்கர் மாநில முதல்வர் விமர்சனம்.!

எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரியவில்லை. ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள். டிசம்பர் 3ம் தேதி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாநில மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுப்போம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்