வேளாண் மசோதாக்களை தூக்கியெரியும் ..சட்டத்தை தயாரித்தது காங்!-8 மாநிலத்தில் அமல்படுத்த திட்டம்

Published by
kavitha

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்க வகை செய்யும் வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை முறியடிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புதிய மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அண்மையில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸே தயாரித்து உள்ளது. இதற்கு ‘விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் விளைபொருட்கள் (சிறப்பு பிரிவுகள்) மசோதா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.அக்கட்சியின் எம்.பி.யும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டசபைகளுக்கு அரசியல் சட்டத்தின் 245(2)வது பிரிவு அதிகாரம் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக பா.ஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்  மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் செல்லாது என்று இந்த வரைவு மாதிரியில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான விலைக்கு தரக்கூடாது என்று ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.குறைந்தபட்ச ஆதரவு விலை உட்பட விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இதில்  சேர்க்கப்பட்டுள்ளன.

இம்மசோதா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு எல்லாம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும். இதன்பிறகு, அம்மாநில சட்ட சபைகளில் இது நிறைவேற்றப்பட்ட உடன் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Published by
kavitha

Recent Posts

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

13 hours ago

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப்…

14 hours ago

தீர்ந்தது சிக்கல்..வீர தீர சூரன் படம் வெளியிட அனுமதி கொடுத்த டெல்லி நீதிமன்றம்!

சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…

16 hours ago

பதவி விலகனும் இல்லைனா இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்! ஓபிஎஸ் பதிலடி!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…

16 hours ago

ஏன் முடியாது? கண்டிப்பாக 300 அடிப்போம்…ஹைதராபாத் பயிற்சியாளர் அதிரடி பேச்சு!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…

18 hours ago

“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா முஸ்லீம்களை வஞ்சிக்கிறது!” பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…

18 hours ago