Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட வந்த பிரதமர் மோடிகருத்து கூறினார். அதில். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஏழை மக்கள் அதிகாரம் பெற்றுள்ளதால், முந்தைய தேர்தல்களில் முறைகேடு செய்தவர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமான வாக்குப்பதிவு முறையை முழுதாக அகற்ற இரவு பகலாக முயற்சித்து வருகின்றனர்.
I.N.D.I.A கூட்டணியின் ஒவ்வொரு தலைவர்களும் மக்கள் மனதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகத்தை உருவாக்கி வருகின்றனர். ஆனால், இன்று (நேற்று) உச்ச நீதிமன்றம் வாக்குப்பெட்டிகளைக் கொள்ளையடிக்க நினைத்தவர்களின் கனவுகளை சிதைத்துவிட்டது. வாக்குச் சீட்டுகளின் காலம் மீண்டும் வராது என்று நீதிமன்றம் இன்று தெளிவாகக் கூறியுள்ளது என பிரதமர் மோடி விமர்சனம் செய்து இருந்தார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், “இந்திய தேசிய காங்கிரஸ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட VVPAT தொடர்பான வழக்கில் சம்பந்தப்படுத்தி கொள்ளவில்லை. தேர்தல் வாக்குபதிவில் பொதுமக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் வண்ணம், VVPATகளின் பயன்பாடு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பையும் நாங்கள் கவனத்தில் கொண்டுவந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிராக இதே போன்ற சந்தேகங்களை பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தான் எழுப்பினார். அப்படியென்றால், 2009இல், உங்கள் அத்வானி நாட்டை தவறாக வழிநடத்தினாரா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அத்வானி போராட்டத்தை முன்னின்று நடத்தியது பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை. முதலில் பிரதமர் மோடி வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். நேருஜி மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உங்கள் தலைவர் அத்வானி மீது கவனம் செலுத்துங்கள் என்று பவன் கேரா கூறினார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…