மணிப்பூரில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது.!  

Default Image

மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்  உரிமை கோரியுள்ளது.

60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள் இந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி-4 , நாகா மக்கள் முன்னிலை-4 , லோக் ஜனசக்தி -1, சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர், டிஎம்சி எம்.எல்.ஏ ஒருவர் ஆகியருடன் கூட்டணியை அமைத்து 32 எம்.எம்.ஏக்களுடன் பாஜக ஆட்சியமைத்தது.

இந்நிலையில், நேற்று தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏ-க்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பாஜக பெருபான்மையை இழந்துள்ளது. ஏற்கனவே, பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து, இன்று மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக ஆட்சி அமைக்க காங்கிரஸ்  உரிமை கோரியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்