அம்மா சோனியா காந்தி கோட்டையில் மகன் ராகுல் காந்தி போட்டி.! பிரியங்காவுக்கு ‘நோ’.!

Sonia Gandhi - Rahul Gandhi - Priyanka Gandhi

Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திர பிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தார். இதில், தான் கடந்த 2004 மக்களவை தேர்தலில் இருந்து எம்பியாக இருந்த தொகுதியான அமேதியில் 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். முதன்முறையாக போட்டியிட்ட வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்று இருந்தார்.

2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது. கேரளா வயநாட்டில் போட்டியிட்டு அங்கு தேர்தலும் முடிந்துவிட்டது. அமேதி தொகுதியில் வரும் மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த முறை ராகுல் காந்தி தோல்வியடைந்த அமேதி தொகுதியில் இந்த முறை கிஷோரி லால் சர்மா போட்டியிட உள்ளார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதேபோல,, 2004ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் சோனியா காந்தி வெற்றி பெற்று இருந்த ரேபரேலி தொகுதியில் இந்த முறை யார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

ரேபரேலி தொகுதியில் தனது தாய்க்கு பதில் மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. பிரியங்கா காந்தி இந்த முறை தேர்தலிலாவது போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பிரச்சாரத்தில் மட்டும் கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்