பிரதமர் மோடியை காணவில்லை ? அரசு பேச்சை நிருத்திவிட்டு செயல்படும் நேரம் இது – காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி காட்டம்
இந்திய பிரதமர் ஆலோசனை மற்றம் உரை நிகழ்த்துவதற்கான நேரம் இது இல்லை என்று காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் மக்கள் ஆங்காங்கே கொரோனாவால் மடிந்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனைகளில் போதிய படுக்கை இன்மை போன்ற காரணங்கலாலும் மக்கள் அநியாயமாக பலியாகி வருகின்றனர். இந்த சூழலில் அடிக்கடி இந்திய பிரதமர் காணொலி வாயிலாக மக்களுக்காக நேரம் ஒதுக்கி உரையாற்றியும், ஆலோசனை வழங்கியும் வருகிறார்.
மேலும் பிரதமர் மோடி தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் மருத்துவ ஊழியர்களுடனான கலந்துரையாடலில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க உரையாற்றினார், இதனையடுத்து பிரதமரின் இந்த செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது, மேலும் காங்கிரஸ் ஜெனரல் செக்ரட்ரி கே.சி வேணுகோபால் “மோடியை கொரோனா தொற்று காலங்களில் காணவில்லை” என்றும், அவர் உரைகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு பதிலாக செயல்பட வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார். மேலும் அவர், “அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?…எந்த பதிலும் இல்லை ” என்றும் கூறியுள்ளார். மேலும் அரசு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.