காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் தீயாக பரவியுள்ளது- ப.சிதம்பரம்

Default Image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் தீயாக பரவியுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்தியா முழுவது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.

Image result for காங்கிரஸ் அறிக்கை

காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்து வந்தனர்.பின்  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது.அதேபோல் பெட்ரோல், டீசல் எங்களின் உண்மையான ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற சிறப்பான வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் பல தேர்தல்களில் பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்துள்ளார்கள் .பிரதமர் யார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வர் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்