அண்ணாமலைக்கு நன்றி.! காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சசிகாந்த் நக்கல் பேச்சு.!

அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமித்தவருக்கு நன்றி என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சசிகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை . ஆளும் பாஜக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது.
கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கபட்டு இருந்தார். இது குறித்து விமர்சித்த கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் தான், காங்கிரஸ் கட்சிக்கு
கூடுதலாக 10 முதல் 20 வரை தொகுதிகள் கிடைத்தது என கூறியுள்ளார்.
மேலும் , அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசினார் என்றும், மாநில பாஜகவை ஒழிக்கும் வேலையில் அண்ணாமலை செயல்பட்டார் என்றும், அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க ஐடியா கொடுத்தவருக்கு மிக்க நன்றி என்றும் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார் .