காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை- பிரதமர் மோடி

Default Image

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது .அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது .
மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, அரசை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை, பாகிஸ்தான் தமக்கு சாதகமாக பயன்படுத்தியது என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்