மஞ்சள் விவகாரம் : காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை.! பிரதமர் மோடி பேச்சு.!
மஞ்சள் விவகாரத்தில் காங்கிரஸ் என்னை அவமதிக்கவில்லை. மஞ்சள் விவசாயிகளை அவமதித்தனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதி நாள் என்பதால், இறுதிக்கட்ட பிரச்சத்தில் பிரதான கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி நேற்று மைசூரு மாவட்டம் நஞ்சன்குட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அங்கு மஞ்சள் விவசாயிகள் முன்பு பேசிய பிரதமர், கொரோனா தொற்று காலத்தில் மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறினேன். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் என் பேச்சை அவமதித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் என்னை அவமதிக்கவில்லை. மஞ்சள் விவசாயிகளை அவமதித்தனர் என பேசினார் பிரதமர் மோடி.