டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC)கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.மேலும்,காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள்,நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.இந்த வார இறுதியில் உதய்பூரில் நடைபெறவுள்ள சிந்தனை அமர்வுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில்,சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து இன்றைய காரியக் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும்,தற்போது நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சனை,பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சமூகநீதி தொடர்பான பல பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,பணவீக்கம்,அதிக வேலையின்மை விகிதம் மற்றும் போன்ற பிற பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கவும் இக்கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்தும்,உட்கட்சி தேர்தல் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…