ஹரியானா வாக்கு எண்ணிக்கை : காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை.!
ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி , காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை பெற்றுள்ளார்.
டெல்லி : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
ஹரியான்வில் இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி, 90 தொகுதிகளில் 57 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. கடந்த 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக இந்த முறை வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. இதனால் ஹரியானாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது.
அதில் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர் ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை பெற்றுவருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களிலும், பாஜக 28 இடங்களிலும், PDP 5 இடங்களிலும், மற்றவை 12 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.