வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் முதல் முதலாக தேர்தல் அரசியலில் களம் காண்கிறார்.
அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். வயநாட்டிடல் 62.92% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன அதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2500 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே தொகுதியில் 2024, 2019 ஆகிய தேர்தல்களில் ராகுல் காந்தி சுமார் 7 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அந்த சாதனையை பிரியங்கா காந்தி வெற்றி பெறுவாரா என்பதை பொருதிருதிருந்து பார்க்கலாம்.