அதிர்ச்சியில் கை: காங்.,கூடாரத்தை காலி! செய்து பாஜகாவில் நிர்வாகிகள்!
குஜராத்தில் மார்ச்., மற்றும் ஜூன்., ஆகிய மாதங்களில், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 5பேர், நேற்று பா.ஜ.,வில் இணைந்த நிகழ்வானது காங்., கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் மாநிலத்தில் அம்மாநில முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜகவின் ஆட்சி நடக்கிறது. இம்மாநில ராஜ்யசபா தேர்தலானது மார்ச், 26ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஐந்து பேர் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ராஜ்யசபா தேர்தலானது ஜூன், 19க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மேலும் 3 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். இவர்களில், ஜிது சவுத்ரி, பிரதியும்னா சிங், ஜடேஜா, ஜே.வி.ககாடியா, அக்ஷய் படேல், பிரிஜேஷ் மெர்ஜா ஆகிய நிர்வாகிகள் அம்மாநில பாஜக தலைவர், ஜிது வாகானி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து, ஜிது வாகானி கூறுகையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களின் வருகை மாநிலத்தில் பா.ஜகவின் பலம் உயர்ந்துள்ளது. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், நாங்கள் நிச்சயம் வெல்வோம்.காங்.,கட்சியானது மாநிலம் மற்றும் மத்தியில் சரியான தலைமை இல்லாததாலும், உட்கட்சி பிரச்னைகளாலும், காங்.,கில் இருந்து விலகியுள்ளதாகவும் இதன் காரணமாகவே பதவிகளை ராஜினாமா செய்ததாக தெரிவித்ததாக கூறிய பாஜக தலைவர் மேலும் 3 எம்.எல்.ஏக்களையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார்.ஆனால் இந்நிகழ்வானது அம்மாநில காங்.,கட்சி இடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.