புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களை நியமித்த காங்கிரஸ்.!
தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்கள் நியமித்தது காங்கிரஸ்.
அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இன்னும் ஒருசில மாதங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், அதற்காக அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட மூத்த தலைவர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, அசாம் மாநிலத்திற்கு பூபேஷ் பாகேல், முகுல் வாஸ்னிக், ஷகீல் அகமது கான், கேரளா மாநிலத்திற்கு அசோக் கெஹ்லோட், லூய்சினோ ஃபாலிரோ, ஜி.பரமேஸ்வரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, நிதின் ரவுத், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹரி பிரசாத், ஆலம்கீர் ஆலம், விஜய் இந்தர் சிங்லா போன்றவர்களை வரும் சட்டமன்ற தேர்தலில், தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
INC COMMUNIQUE
Important Notification regarding the appointment of Senior Observers for overseeing Election Campaign Management & Coordination in assembly elections of Assam, Kerala, Tamil Nadu, Puducherry and West Bengal pic.twitter.com/UK9Jk1dpcd
— INC Sandesh (@INCSandesh) January 6, 2021