காங்கிரஸ் கட்சிக்கு ஜூன் மாதம் தலைவர் தேர்வு
ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது.
இதனிடையேதான் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.ஆலோசனைக்கு பின் ,காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில் ,இந்தாண்டு ஜூன் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.