Categories: இந்தியா

நாளை நாடு முழுவதும் போராட்டம்.. காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

Congress: வருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், வருமான வரி கணக்கை முறையாக செலுத்தாத கட்சிகளுக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

அந்தவகையில், காங்கிரஸிடம் சுமார் ரூ.1,800 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் இதனால் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கண்டித்து வருமான வரி விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த கோரி காங்கிரஸ் கட்சியினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ரூ.1,823 கோடி வருமான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டதற்கு எதிராகவும் 135 கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்ததற்கு எதிராகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதற்கு எதிராகவும் போராட்டம் நடத்த கோரி  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசே வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை நாடு முழுவதும் மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் வருமான வரித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Recent Posts

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

4 minutes ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

9 minutes ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

1 hour ago

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

3 hours ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

3 hours ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

4 hours ago