வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செ.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிரியங்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்தோணி காங்.,கட்சி செப்.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக தகவ தெரிவித்தார்.
மேலும் காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது குறித்து தெரிவிக்கையில், ‘வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். கட்சி தலைவர்கள், தங்கள் மாநில கவர்னர்களிடம் இது குறித்து குறிப்பாணையை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…