ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ( ஜே.எம்.எம் ) கட்சியுடன் இணைந்து கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன.
அதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 46 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதில் ஜே.எம்.எம் கட்சியானது 30 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது. அதே போல பாஜக அரசானது 25 இடங்களில் வென்றிருந்தது. பெரும்பாண்மை நிரூபிக்க 41 இடங்கள் இருந்தால் போதுமானது.
இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஜார்கண்டில் ஆட்சியமைக்க உள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றிய ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த தகவலை ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் இந்த வெற்றிக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…