ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மதம் 24ஆம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.
பாஜக , காங்கிரஸ் நேரடி போட்டியானது இம்மாநிலத்திலும் இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை செய்ததாக குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியை பதற வைத்த AI – DeepFake டெக்னலாஜி.! விவரம் இதோ…
இது குறித்து அவர் கூறுகையில், காளி-சிந்து அணை பெயரில் 250 கோடி ரூபாய் ஊழல், ரேஷனில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ் அரசு . ரேஷன் பொருட்கள் ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கு ஒரு போதும் நன்மை செய்யாது. அவர்கள் ராஜஸ்தானையே காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மிஷின் போல ஊழல் மிஷினாக மாற்றியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அரசை வேரோடு தூக்கி எறிய வேண்டும் என தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு இருந்தார் அமித்ஷா.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சக்வாடா பகுதியில் பிரச்சாரத்தில் கூறுகையில், ” ராஜஸ்தானில் பாஜக சிதறி கிடக்கிறது, பிரதமர் மோடி பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் அவர், பாஜக செய்த நல்லது என ஒரு செய்தியையும் பேசுவதில்லை.
அவர்கள் சிவப்பு டைரி மற்றும் மஞ்சள் டைரி பற்றி தான் பேசுகிறார்கள். இத்தனை நாள் வந்து இன்னும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என பாஜக கண்டறியவில்லை எனவும் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…