காங்கிரஸ் ஊழல்… பாஜக டைரி… அனல் பறக்கும் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம்.!

Union Minister Amit shah - Priyanka Gandhi

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மதம் 24ஆம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

பாஜக , காங்கிரஸ் நேரடி போட்டியானது இம்மாநிலத்திலும் இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை செய்ததாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியை பதற வைத்த AI – DeepFake டெக்னலாஜி.! விவரம் இதோ…

இது குறித்து அவர் கூறுகையில், காளி-சிந்து அணை பெயரில் 250 கோடி ரூபாய் ஊழல், ரேஷனில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ் அரசு . ரேஷன் பொருட்கள் ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கு ஒரு போதும் நன்மை செய்யாது. அவர்கள் ராஜஸ்தானையே காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் மிஷின் போல ஊழல் மிஷினாக மாற்றியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு அரசை வேரோடு தூக்கி எறிய வேண்டும் என தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு இருந்தார் அமித்ஷா.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சக்வாடா பகுதியில் பிரச்சாரத்தில்  கூறுகையில், ” ராஜஸ்தானில் பாஜக சிதறி கிடக்கிறது, பிரதமர் மோடி பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் அவர், பாஜக செய்த நல்லது என ஒரு செய்தியையும் பேசுவதில்லை.

அவர்கள் சிவப்பு டைரி மற்றும் மஞ்சள் டைரி பற்றி தான் பேசுகிறார்கள். இத்தனை நாள் வந்து இன்னும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என பாஜக கண்டறியவில்லை எனவும் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்