தொடங்கியது வாக்கு எண்ணிக்கை., காஷ்மீர், ஹரியானாவில் முன்னிலை பெரும் காங்கிரஸ்.!
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் அண்மையில் தேர்தல் நிறைவடைந்தத. அதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 8) இரு மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தற்போது வரையில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் தற்போது பிரகாசமாகியுள்ளது என தேர்தல் முன்னிலை முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 71 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், காங்கிரஸ் கூட்டணி 31 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) 4 இடங்களிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதேபோல ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 71 தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் 46 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 19 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்று வருகின்றன. மற்றவை 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.