காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய ‘நாய்’ கருத்து.! பாஜக எம்எல்ஏ கடும் விமர்சனம்.!
காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் (பாஜக) இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை. என என காங். தலைவர் கார்கே கூறியதற்கு பாஜக எம்.எல்.ஏ தனது எதிர்கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸார் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பல தியாகங்களை செய்துள்ளது. உங்கள் தரப்பில் இருந்து ஒரு நாய் கூட இறந்ததில்லை என கட்டமாக தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
இது குறித்து மத்திய பிரதேச பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் சர்மா, “காங்கிரஸ் மக்கள் சோனியா காந்தியின் ‘தர்பாரி குட்டே’ (இதுவும் நாய்கள் என பொருள்படும் சொல் தான்) போல சுற்றித் திரிகிறார்கள், எனவும், அதனால் அவர்கள் மற்றவர்களையும் ஒரே மாதிரியாகப் பார்க்கிறார்கள்.