பரபரக்கும் சண்டிகர் மேயர் தேர்தல்… ஆபரேஷன் தாமரை தோல்வி.! காங். ஆம் ஆத்மி கடும் அதிருப்தி.!

BJP - Congress - AAP

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு தலைநகராக விளங்கும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் அதிகாரி அனில் மசி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான மறு தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

பில்கிஸ் பானு வழக்கு…கூடுதல் அவகாசம் கோரி மனு..!

சண்டிகரில் உள்ள மொத்தம் என் 35 மாநகராட்சி இடங்களில் பாஜக 14 கவுன்சிலர்களை கொண்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து முறையை 13 மற்றும் 7 கவுன்சிலர்களை பெற்றுள்ளது. ஷிரோமணி அகாலி தளத்துக்கு (எஸ்ஏடி) ஒரு கவுன்சிலர் உள்ளார். இந்த சமயத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய மூன்று பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற இருந்தது.

இந்தியா கூட்டணியில் ஒன்றிணைந்துள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த தேர்தலில் ஒன்றாக களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த தேர்தலை தேசிய தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சண்டிகர் கவுன்சிலர்கள் தவிர பாஜக எம்பி-யான கிரோன் கெர் மேயர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் ராகவ் சத்தா கூறுகையில், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, பாஜக தேர்தல் நடத்தாமல் தாமதப்படுத்தும் வேலையை செய்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்போம் என தெரிவித்தார்.

அதேபோல், சண்டிகர் காங்கிரஸ் தலைவர் ஹெச் எஸ் லக்கி கூறுகையில், சண்டிகரில் “ஆபரேஷன் தாமரை” தோல்வி அடைந்து விட்டது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒத்திவைத்து  அவர்கள் தோல்வியை உணர்ந்து விட்டனர். அதனால் அவர்கள் வாக்களிக்க வரவில்லை. வாக்களிக்க வராததால் அவர்கள் தார்மீக அடிப்படையில் தோற்று விட்டனர். நாங்கள் வாக்களிக்க வந்துள்ளோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள் என்று ஹெச் எஸ் லக்கி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்