பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் – பிரதமர் மோடி
பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மதியம் 3.02 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக 10 நிமிடம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது.
தற்போது, இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்கா மற்றும் லக்சம்பேர்க்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒரு விமானம் உட்பட ஒன்பது செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளது.
இதற்கு, நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து சாதனைப்படைத்துள்ளனர் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Nine satellites, including four each from the US and Luxembourg and one from Lithuania, have also been launched in the Mission.
— Narendra Modi (@narendramodi) November 7, 2020
இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் உள்ளது. அதில், இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மூலம் விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறனை கொண்டது.