சந்திரயான்-3 வெற்றிக்கு பங்களித்த முழு குழுவிற்கு வாழ்த்துக்கள்..! கர்நாடக துணை முதல்வர்
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ குழுவினருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நமது விஞ்ஞானிகள் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளனர்.” எனக் கூறினார்.
மேலும், “சந்திரயான்-3 வெற்றிக்கு பங்களித்த முழு குழுவிற்கும் (இஸ்ரோ) வாழ்த்துக்கள்.அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்