மிஷன் சக்தியின் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது.
நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த உரை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் “ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ(DRDO)-க்கு எனது வாழ்த்துக்கள்.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தியேட்டர் தின வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தி பதிவை போல மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய அறிவிப்பு ஒரு முடிவில்லா நாடகம் ஆகும்.இந்த சோதனை ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல் எல்லாப் புகழையும் தானே எடுத்துக் கொண்டார்.ஆனால் உண்மையான புகழ் நமது விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களையும் தான் சேரும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…