மோடிக்கு உலக தியேட்டர் தின வாழ்த்துக்கள்!ராகுல்,மம்தா கடும் தாக்கு

Default Image

மிஷன் சக்தியின் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இன்று விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது.

Image result for mission shakti RAHUL MAMATA

 

நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த உரை குறித்து  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் “ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ(DRDO)-க்கு எனது வாழ்த்துக்கள்.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தியேட்டர் தின வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ராகுல் காந்தி பதிவை போல மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய அறிவிப்பு ஒரு முடிவில்லா நாடகம் ஆகும்.இந்த சோதனை ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.ஆனால் பிரதமர் மோடி வழக்கம் போல் எல்லாப் புகழையும் தானே எடுத்துக் கொண்டார்.ஆனால் உண்மையான புகழ் நமது விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களையும் தான் சேரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested