ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது 62-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் முன்னோடியாக இருப்பதாகவும், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் தேசத்துக்கு சேவை செய்ய இன்னும் எனக்கு பெலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது எனக் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
Thank you very much, Hon.@PMOIndia. Your blessings and guidance give me strength and motivation to serve the nation. ???????? https://t.co/V5Xz4AFiDl
— Nirmala Sitharaman (@nsitharaman) August 18, 2021