நாய்களுக்கு இடையே மோதல்! கோபத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலி!

dogs' fight

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அருகருகே இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்கள் வளர்த்து வந்த நாய்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் முத்தியது.

இதில், வங்கி பாதுகாவலராக பணிபுரியும் நபர் திடீரென வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர், இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சண்டை பெரிதாக ஆனதால், தெருவில் நடித்து சென்று கொண்டிருந்த மேலும் 6 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார் மற்றும் அவரது துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்