சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஜார்க்ண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் முறையாக அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் விசாரணைக்கு 29 அல்லது 31 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
பின்னர் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லும் முன் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஜார்க்ண்ட் ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து, ஹேமந்த் சோரனை பல மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை கைது செய்தது.
அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.
இன்று முதல் திமுக – அதிமுக தோ்தல் தயாரிப்புக் குழுக்கள் சுற்றுப் பயணம்..!
சம்பாய் சோரன் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதன்படி முதல்வராக பொறுப்பெற்ற சாம்பாய் சோரன் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சி கூட்டணி எம் எல்.ஏக்கள் ஐதராபாத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஐதராபாத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று இரவு ராஞ்சிக்கு திரும்பினர்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும். பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (28 எம்எல்.ஏக்கள்), காங்கிரஸ் (16), ஆர்ஜேடி மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்எல்ஏ என மொத்தம் 46 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…