பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்.
பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் பாஜக கூட்டணி மூலம் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
இன்று விசிக, கொ.ம.தே.க உடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!
இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும். தற்போதைய பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக 127 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
அதில் பாஜகவிற்கு 78 எம்.எல்.ஏக்களும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 எம்.எல்.ஏக்களும், ஹெச்.ஏ.எம்.எஸ்-க்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகளான 114 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் 79 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸில் 19 எம்.எல்.ஏக்களும், இடதுசாரிகளில் 16 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…