நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலையில், எப்படி கொலை செய்து, பிறகு எப்படி உடலை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது என கொலையாளி அஃப்தாப் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளான்.
சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய கொலை சம்பவம் என்றால் அது புது டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் இளம் பெண் தனது காதலன் அஃப்தாப்பால் கொல்லப்பட்ட சம்பவம் தான். அதுவும் இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது என்பதுவும், ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டியதும் இப்போது நினைத்தாலும் கொலை நடுங்க வைத்துளளது.
தற்போது காவல்துறை வசம் இருக்கும் கொலையாளி அஃப்தாப், போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர வைக்கும் வாக்கு மூலத்தை வெளியிட்டுள்ளான். அதாவது வெட்டிய 35 துண்டுகளை தனது வீட்டு ஃபிரிட்ஜில் வைத்துள்ளான்.
அதாவது, மே மாதம் இந்த கொலையை செய்துவிட்டு, இது யாருக்கும் தெரிந்து விட கூடாது என, குளியலறையில் வைத்து 35 துண்டுகளாக வெட்டி அதனை ஃபிரிட்ஜில் வைத்துள்ளான். பிறகு முதலில் அழுகி நாற்றம் அடிக்க கூடிய உடல் பாகங்களான கல்லீரல், குடல் போன்றவற்றை எடுத்து அப்புற படுத்தியுள்ளான். முகத்தை முதலில் எரித்துள்ளான்.
பின்னர் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் இந்த உடல் பாகங்களை வீசி சென்று அப்புறப்படுத்தியுள்ளான். பிறகு தடயங்கள் ஏதும் இருந்து விட கூடாது என ஃபிரிட்ஜை ஆசிட் கொண்டு சுத்தம் செய்துள்ளான். என்பது போலீசார் வாக்குமூலத்தில் அஃப்தாப் தெரிவித்துள்ளான்.
இப்படி உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு மட்டும் கூடுதல் தண்ணீரை செலவளித்து 300 ரூபாய் கட்டணம் செலுத்தும் அளவுக்கு வந்துள்ளது. டெல்லி அரசு 20,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே இலவசமாக தருவார்கள். அதற்க்கு மீறினால் கட்டணம் செலுத்த வேண்டும்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…