லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படை தயார் நிலையில் உளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல்.
லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ படைகளை நிலைநிறுத்தி உள்ளது.
இதனால் இந்தியா – சீனாவு விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் பேசிய ராணுவ தளபதி, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவிப்பது கவலையளிக்கிறது.
சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறினார். அக்டோபர் 2வது வாரத்தில் நடக்கும் 13வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…