டெல்லி மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கல்விக்கு 16,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாநில பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த ஒரு நாளுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் பட்ஜெட்டில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பியது, பிறகு விளக்கங்கள் தொடர்பாக பட்ஜெட்டை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கெஜ்ரிவால் அரசாங்கத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
மொத்தமாக அறிவிக்கப்பட்ட 78,800 கோடி பட்ஜெட்டில், கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கல்வித் துறைக்கு சுமார் ரூ.16,500 கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு கல்வி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ₹200 கோடி அதிகமாகும்.
மேலும் 350 அரசுப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகள் வழங்கப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தது.
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…