கட்டாய விடுப்பு…!எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு …!
கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையேயான மோதல்தான் கடந்த ஒரு மாதங்களாக மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் தலைப்பு செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சி.பி.ஐ என்ற அமைப்பையே நிலைகுலை வைத்தது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வழக்கு உட்பட முக்கிய வழக்குகளில் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா தலையிடுகிறார்.அந்த வழக்குகளின் விசாரணையை முடக்க அலோக் முயல்கிறார்” எனக் கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியதுடன் மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கடிதமும் எழுதியிருந்தார் துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா.
இவருடைய கடிதம் தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அலோக் வர்மா, அஸ்தானா மீது ஆறு புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் திசை திருப்பவுமே அவர் என் மீது புகார் கூறுகிறார். அதில் உண்மையில்லை” என கூறினார்.
இந்நிலையில் இறைச்சி ஏற்றுமதி வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அலோக் வர்மா மீதும், ரூ.3 கோடி லஞ்சம் பெற்றதாக அஸ்தானா மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
நேற்று (அக்டோபர் 23 ஆம் தேதி) கைது செய்யப்பட்ட சிபிஐ அதிகாரி தேவேந்திரகுமார் ஜாமின் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன் பின் சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவிட்டது மத்திய அரசு.அதேபோல் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சி.பி.ஐ துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானா ஆகியோரை விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவதை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது .