வெளிநாடுகளில் இருந்த வந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை – மத்திய சுகாதாரத்துறை
வெளிநாடுகளில் இருந்த வந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றது.மேலும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறைவெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளது .குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலக்குறைவு, கர்ப்பிணி என்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.