பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

Default Image

பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்.

இந்தியன் ரயில்வே தங்களது 13 லட்சம் பணியாளர்களுக்கும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்கனவே ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் கீழ் மருத்துவ உதவி அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விரிவான மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவசர காலத்தின் போது ரயில்வே ஊழியர்களுக்கு காப்பீடு தொகையை வழங்கும் நோக்கில் விரிவான காப்பீடு திட்டம் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் 586 சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 56 மருத்துமனைகளும், 45 துணை மருத்துவமனைகளும், 16 மண்டல மருத்துவமனைகளும் செயல்பட்டுவருகின்றன.

மேலும், அதில் 2,500 மருத்துவர்களும், 35,000 மருத்துவ பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்