நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
முன்னதாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடபெற்றது. இதில் 65.54 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.50% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியில் வெயிலையும் பொருட்படுத்தாமல், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.
திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 % வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக வாக்குப்பதிவு விபரம்
அசாம் – 76.73%
பீகார் -58.58%
சத்தீஸ்கர் -74.07%
ஜம்மு-காஷ்மீர் -72.32%
கர்நாடகா -68.38%
கேரளா – 66.61%
மத்திய பிரதேசம் – 58.20%
மகாராஷ்டிரா – 59.63%
மணிப்பூர் – 77.95%
ராஜஸ்தான் – 64.07%
திரிபுரா – 79.59%
உத்தர பிரதேசம் – 54.85%
மேற்கு வங்கம் – 71.84%
2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்கள்:
கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8, அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று நிறைவு பெற்றது.