டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் உள்ளிநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். அதன்படி, உள்நாட்டு போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த அமைச்சர் சதானந்தா கவுடா தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்று புகார் கூறப்படுகிறது. 2 மாதமாக டெல்லியில் தங்கியிருந்த சதானந்தா கவுடா இன்று விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். டெல்லி உட்பட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு யார் வந்தாலும் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில், சதானந்தா கவுடா முகாமுக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றதால் புகார் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…