அயோத்தி தீர்ப்பு சம்பந்தப்பட்ட சீராய்வு மனுக்கள் இன்று விசாரணை.!

Default Image
  • நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த 09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  • இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த மாதம்  09-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என கூறியது.

மேலும் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது. இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பது மனுக்கள் இந்த வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.மீதம் உள்ள ஒன்பது மனுக்கள் புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி நிலம் தொடர்பாக முன்பு  நடைபெற்ற வழக்கின் மனுதாரர்களில் ஒருவர் எம்.சித்திக். அவரின் மகனும் ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அஷ்ஹத் ரஷிதி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2-ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

மேலும் சில இஸ்லாமிய அமைப்பின் சார்பில்  சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் இன்று  நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு முன்னர் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்